இலங்கை ரூபாவின் பெறுமதி வெகுவாக குறைந்துள்ளது

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வெகுவாக குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளிநாட்டு நாணயமாற்று வீதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 161.008 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் ஒரு டொலருக்காக செலுத்தப்பட வேண்டிய அதிகளவான விலை இதுவாகும்.

இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைப்பது குறைந்துள்ளதே இதற்கு காரணம். இதனை டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 157.808 ரூபாவாக உயர்ந்துள்ளது.

ஏற்றுமதிகளை விட இறக்குமதிகள் அதிகரித்துள்ளமை, வெளிநாட்டு அந்நிய செலாவணி கிடைக்காமை, நாட்டில் காணப்படும் அரசியல், பொருளாதார பிரச்சினைகள் இதற்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த சில மாதங்களாக அமெரிக்க டொலரின் விலை வெகுவாக அதிகரித்து வந்துள்ளது. 156, 157,158 மற்றும் கடந்த மாதமும் இந்த மாதமும் 159, 160 ரூபா என அதிகரித்துள்ளது.