இலங்கை வரலாற்றில் டொலர் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

இலங்கையின் நிதி நிலை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 162 ரூபாயை தாண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 158 ரூபாய் 91 சதம் எனவும், விற்பனை விலை 162 ரூபாய் 11 சதம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 160.4 ரூபாயாக காணப்பட்டது. அது படிப்படியாக உயர்ந்து இன்று 162.11 ரூபாயாக காணப்படுகின்றது.