இலங்கை ரூபாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை!

Report Print Murali Murali in பொருளாதாரம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 173 ரூபாவை அண்மித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மை காலமாக இலங்கை ரூபாவின் பெறுமதி என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதை காணமுடிகின்றது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 172.9301 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, டொலரின் பெறுமதி அதிகரிப்பானது கொழும்பு அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிராக டொலரின் பெறுமதி அதிகரிப்பை எதிர்தரப்பினர் ஆயுதமாக எடுத்துள்ளனர்.

அத்துடன், டொலரின் பெறுமதி அதிகரிப்பு இலங்கை பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதுடன், இலங்கையில் வெளிநாட்டு கடன் தொகையிலும் தாக்கத்தை செலுத்தும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.