ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி! மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் பெறுமதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக ரூபாயை டொலராக மாற்றி அத்தியவசியமற்ற நுகர்வு பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை மத்திய வங்கி தடைவிதித்துள்ளது.

இது குறித்து வர்த்தக வங்கிகள் போன்ற அதிகாரம் பெற்ற நிதி வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2018 ஒக்டோபர் 10ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கை ரூபாயை அமெரிக்க டொலர்களாக மாற்றி அத்தியவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பந்தய கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வாசனை திரவியங்கள், கழிவறை பொருட்கள், குழந்தை வாசனை திரவியங்கள் உட்பட பல பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை மத்திய வங்கி தடைவிதித்துள்ளது.