அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Report Print Shalini in பொருளாதாரம்

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதியின் படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.90 ரூபாவாகவும், கொள்வனவு விலை 176.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைக் காலமாக தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், இன்று அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers