ஆட்சி முடியும் முன்னர் இதனை செய்து காட்டுங்கள்! விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை

Report Print Murali Murali in பொருளாதாரம்

வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீடுகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைக் காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சிக்காலம் முடிய முன்னர் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவும். அதற்கு தேவையான வளங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

வடக்கு கிழக்கு பிரதேசங்களை மீள் கட்டியெழுப்ப கடந்த காலத்தில் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. எனினும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை.

ஆகவே வடக்கு கிழக்கு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.