இலங்கை குண்டுவெடிப்பு : சுற்றுலாத்துறை தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் வெளியிட்ட கருத்து

Report Print Manju in பொருளாதாரம்

இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளினால், சுற்றுலாத்துறை தற்காலிகமான பாதிப்பு ஏற்பட்டாலும் நீண்ட கால பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினமான நேற்றைய தினம் கொழும்பு கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம் உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் தங்களது சுற்றுலா நாட்களை குறைத்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதில் ஆர்வம் காட்டி வருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் சுற்றுலா மேம்பாட்டு பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர் குண்டு வெடிப்புகளினால், இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்காலிகமாக பாதிக்கப்பட்டாலும், நீண்ட கால பாதிப்புகள் இருக்காது என்றும் இலங்கையில் வெளிநாடுகள் செய்யும் முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிகளில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.