இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

இலங்கையில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டு மேலும் வன்முறைகள் தடுக்கப்படுமானால் பொருளாதாரத்தை விரைவில் சீர் செய்ய முடியும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இந்த கருத்தை வார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், நடப்பு பிரச்சினைகள் காரணமாக வரவு செலவு திட்டத்தின் துண்டு விழும் தொகை அதிகரிக்கும்.

வருமானத்தை பார்க்கும் போது சுற்றுலாத்துறையில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்த வருமானத்தில், இந்த துறையின் பெறுமதிசேர் வரி அறவீடு குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

எனினும் அது, சமாளிக்க கூடிய ஒன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.