வலுவடைந்துவரும் இலங்கை ரூபாவின் பெறுமதி...!

Report Print S.P. Thas S.P. Thas in பொருளாதாரம்

நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையையடுத்து வீழ்ச்சி கண்டிருந்த ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு அமைவாக இலங்கயின் ரூபா 3.8 சதவீதத்தினால் வலுவடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக அரசியல் சூழ்நிலையினால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பிரதமரை மாற்றியமை, பின்னர் நீதிமன்றச் செயற்பாடுகள், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கலைப்பு, என்று அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சினைகளால் நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டிருந்தது.

அந்நிய முதலீடுகள் குறைந்ததோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மிகக் குறைவடைந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து மீண்டும் சுற்றுலாத்துறை முற்றாகப் பாதித்ததோடு, முதலீட்டாளர்களின் வருகையும் குறைவடைந்தது.

இதனால் ரூபாவின் பெறுமதியும் சரிவு கண்டது. எனினும், ரூபாவின் பெறுமதி தற்பொழுது அதிரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவின் டொலருக்கு அமைவாக இலங்கை ரூபா குறுகிய காலத்தில் வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் இந்த பின்னடைவில் தற்பொழுது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 174.16 ரூபாவாக அமைந்திருந்தது. இதன் விற்பனை விலை 178.11 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை இந்தியா சுவிஸ் மற்றும், சீனா தற்போது தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.