பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை! மத்திய வங்கி ஆளுநர்

Report Print Murali Murali in பொருளாதாரம்

இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிலர் வெளியிடும் கருத்தினை இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனை தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கைப் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சி கண்டிருப்பதாக சிலர் முன்னெடுக்கும் பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது. பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதத்திற்கும் குறைந்திருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

எனினும், அவ்வாறான நிலை ஏற்படவில்லை. நாட்டில் நிலவிய நிலைமையின் காரணமாக வீழ்ச்சி அடைந்திருந்த பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.