இலங்கையில் பிரஜை ஒருவருக்கு 530,000 ரூபாய் கடன் சுமை

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

இலங்கையில் பிரஜை ஒருவருக்கு தற்போது 530,000 ரூபாய் கடன் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரஜை ஒருவர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய அல்லது படு கடன் என சொல்லப்பட கூடிய அளவில் ஒருவருக்கு 530,000 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது.

பிறந்த குழந்தை ஒன்றுக்கு 530,000 ரூபாய் கடன் என்று சொல்லப்படுகின்ற நிலையில் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

இந்த நிலைமைக்கு கடந்த 35 வருடங்களாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களே பொறுப்பு கூற வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருப்பதனையும், அது கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே காமினி விஜயசிங்க எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஜே.வி.பியினருடன இணைந்து அரசியலில் ஈடுப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers