இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட பாரிய நட்டம்

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

இலங்கை மின்சார சபை கடந்த நான்கு மாதத்துக்குள் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் 23.1பில்லியன் ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சுனால் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் இலங்கை மின்சார சபைக்கு 17.5 பில்லியன் ரூபாய் மாத்திரமே நட்டம் ஏற்பட்டுள்ளது என்றாலும் அது தற்போது 5 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நட்டத்திற்கு காரணம் முக்கியமாக வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தில் இருந்து மாத்திரம் 103.1 பில்லியன் ரூபாய் வருமதியாக மின்சார சபைக்கு வர வேண்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.