புதிய சட்டங்கள் அவசியம்! இந்திரஜித் குமாரசுவாமி

Report Print Sujitha Sri in பொருளாதாரம்

நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் அவசியம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த செயலமர்வு ஒன்றில் வைத்து அண்மையில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதை தடுப்பதற்கு நாணய சட்டம் திருத்தியமைக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.