திருகோணமலைக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Report Print Gokulan Gokulan in பொருளாதாரம்
71Shares

சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் வெளிநாட்டு பயணிகளின் வரவு தற்போது அதிகரித்து காணப்படுவதாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் திருகோணமலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதில் லண்டன், ஸ்பெயின், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாட்டவர்களும் தங்களது கருத்துக்களை இதன்பொது பகிர்ந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

அவர்கள் இலங்கை போன்ற இயற்கைச் சூழல் பல்வேறு சுற்றுலாத் தளங்களை கொண்டு காணப்படுவதும் தங்களது விடுமுறைகளை மற்றும் பொழுதுபோக்குகளை கழிப்பதற்கும் சிறந்த இடமாக காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் வெளிநாட்டவர்களான எமக்கு இங்கு வருகை தருவது மிகவும் பிடித்துள்ளது.

இலங்கை போன்ற நாடுகள் பல்வேறு வளங்களை கொண்டு காணப்படுவதும் நாட்டின் அந்நிய செலவாணிக்கு பாரிய பங்களிப்புக்கள் சுற்றுலாத் துறை மூலமாக பெறப்படுவதாக தகவல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வாறான இயற்கை எழில் மிக்க பிரதேசங்களை கண்டு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளார்கள்.

சுற்றுலாத் துறை மூலமாக கிழக்கிலங்கை பல்வேறு வருமானங்களை ஈட்டிக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்கிறது. வெளிநாட்டவர்களே தற்போதைய கால சூழ்நிலையில் அதிகமாக ஹோட்டல்களில் வருகை தருவதை அவதானிக்க முடிகிறது. உள்நாட்டுப் பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

மேலும் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பல நன்மைகளை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.