100 பில்லியன் ரூபாவை கடனாக பெற பேச்சுவார்த்தை! இலங்கையில் வட்டி வீதங்கள் மீண்டும் அதிகரிக்குமா?

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

2019ஆம் ஆண்டில் அரசாங்கம் எதிர்பார்த்த வருமான இலக்கை அடைய முடியவில்லை என்பதால், மேலும் 100 பில்லியன் ரூபாவை கடனாக பெறுவதற்காக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானத்தில் சுமார் 300 பில்லியன் ரூபா துண்டு விழுந்துள்ளது.

இதன் காரணமாகவே 100 பில்லியன் ரூபாவை கடனாக பெறுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் கடனை பெற்றுக் கொள்ள கூடிய வரையறை வரை ஏற்கனவே கடன் பெறப்பட்டுள்ளது.

விரைவில் நாடாளுமன்றத்தில் கடன் பெறும் வரையறையை அதிகரிக்கும் யோசனை ஒன்றை கொண்டு வந்த பின், இந்த கடன் பெறப்பட உள்ளது.

100 பில்லியன் ரூபா கடனாக பெறப்பட உள்ளதால், அரசாங்கம் குறைத்துள்ள வட்டி வீதம் மீண்டும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.