தங்க நகைகள் வாங்கவுள்ளவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

Report Print Sujitha Sri in பொருளாதாரம்

எதிர்வரும் 27ஆம் திகதி உலக வாழ் இந்துக்கள் அனைவராலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் கிழமைகளில் புத்தாடைகள் மற்றும் தங்க நகைகளின் கொள்வனவுகள் அதிகளவில் இடம்பெறும்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தங்கத்தின் விலை மட்டுப்படுத்தப்பட்டளவில் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

அந்த வகையில் தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1500 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி உலக சந்தையில் தங்கத்தின் விலையில் கடுமையாக அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

கடந்த 6 வருடங்களில் இதுவே தங்கத்தின் உச்சகட்ட விலை அதிகரிப்பு எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தற்போது தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் தங்க விற்பனை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.