முடிவுக்கு வரும் எல்.பீ எரிவாயுவிற்கான தட்டுப்பாடு

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எல்.பீ எரிவாயுவிற்கான தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுமார் 3500 மெற்றிக்தொன் எல்.பீ எரிவாயுவை ஏற்றிய கப்பல் மும்பையில் இருந்து கொழும்பு துறைமுகம் நோக்கி வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த கப்பல் இன்று அதிகாலை இலங்கை வந்துள்ள நிலையில், ஒரு நாளுக்குள் எரிவாயு கொள்கலன்கள் நிரப்பப்பட்டு முகவர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

செங்கடலில் ஈரானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு உள்ளான நிலையிலேயே எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவியுள்ளது.

இதனையடுத்து மும்பையில் இருந்து கப்பல் வரவழைக்கப்பட்ட போதும் அதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, எரிவாயுவை தாங்கிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers