கொழும்பு அரசியல் மாற்றம் பங்குச் சந்தை நிலைமையை மாற்றுமா?

Report Print Banu in பொருளாதாரம்

ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றதால் இலங்கை பங்குச் சந்தை பெருமளவில் உயர்வடைந்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றார். இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய தினம் தேர்தலில் யார் வெற்றிபெற்றால் பங்குச் சந்தை உயரும் என்று தரகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிக ஆய்வாளர்கள் கணித்திருந்தனர்.

அதனடிப்படையில் அவர்களின் கணிப்பு சரியாக அமைந்து கோத்தபாய ராஜபக்ஸ வெற்றிபெற்றுள்ளார். தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இவ் வெற்றியை கொண்டாடுவதால் கொழும்பு பங்குச்சந்தையில் இன்றைய தினம் ஆரம்ப வர்த்தகத்தில் பங்கு விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

அனைத்து பங்கு விலைக் குறியீடும் 15 நிமிட வர்த்தகத்திற்குப் பிறகு 106.81 புள்ளிகள் அல்லது 1.76 சதவீதமாக அதிகரித்து 6,129.20 ஆக உயர்வடைந்தது. அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட SAP SL20 89.42 புள்ளிகள் அல்லது 2.99 சதவீதம் உயர்ந்து 3,075.94 ஆக உயர்வடைந்து காணப்பட்டது. பங்கு விலைகள் பகலில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.