அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் வங்கி கடன் வட்டி வீதம் குறைவடையும்

Report Print Sujitha Sri in பொருளாதாரம்

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அனுமதி பெற்ற வங்கிகளின் கடன் வட்டி வீதம் குறிப்பிடத்தக்க அளவை விட குறைவடையும், அத்தோடு வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கடனுக்கான கோரிக்கை அதிகரிக்கக்கூடும்.

இந்த வருடம் செப்டெம்பர் மாத கடனுக்கான வட்டி வீதத்திற்கு உயர் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

இதில் அனுமதி பெற்ற வங்கிகளில் வைப்பீட்டுக்கான வட்டி வீதத்திற்கு பதிலாக விதிக்கப்பட்ட ஆகக்கூடிய வட்டி வீத வரையறை நீக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.