தேயிலை இறக்குமதிக்கு தடை விதிக்க அரசாங்கம் தீர்மானம்

Report Print Malar in பொருளாதாரம்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தேயிலை இறக்குமதி மற்றும் மீள் ஏற்றுமதி செய்வதினை முற்றாக தடைவிதிக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, தேயிலை உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்தல் என்பன இதன் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.