இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் முழு ஆதரவு

Report Print Malar in பொருளாதாரம்

இலங்கை வாழ் பொதுமக்கள் அனைவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதி மெனுஎலா கோரட்டி உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற புதிய அரச நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான நிதியுதவி திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி தொடர்பான அனுமதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கொள்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.