கொழும்பு பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

கொழும்பு பங்குச் சந்தை இன்று கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

இன்றைய நாள் முடிவில், அனைத்து பங்கு விலைக் குறியீடு 127.25 புள்ளிகள் குறைந்து 5,898.84 புள்ளிகளாக காணப்பட்டது.

அதன்படி, அனைத்து பங்கு விலைக் குறியீடும் எஸ் அண்ட் பி எஸ்எல் 20 குறியீடும் முறையே 2.11% மற்றும் 2.64% வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்குச் சந்தையின் வருமானம் 624.43 மில்லியனாக இருந்தது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வளைக்குடாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் பாதிப்புகள் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டுச் சந்தைகளில் பிரதிபலித்து வருவதாகவும் இப்படியான உலக நெருக்கடி நிலைமை இலங்கை போன்ற சிறிய பொருளாதரத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் என இது தொடர்பாக கருத்து வெளியிட்டு பங்குச் சந்தை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...