உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

வணிக வங்கிகள், மத்திய வங்கியில் மேற்கொள்ளும் நிலையான வைப்பு சலுகை வட்டிவீதங்களையும் நிலையான கடன் சலுகை வட்டிவீதங்கைளயும் குறைப்பதற்கு மத்திய வங்கி முடிவெடுத்துள்ளது.

இதன்படி நிலையான வைப்பு வட்டிவீதத்தை 50 அடிப்படை புள்ளிகளில் இருந்து 6.50 வீதத்தினால் குறைக்கவும் நிலையான கடன் சலுகை வீதத்தை 7.50 வீதத்தினால் குறைக்கவும் மத்திய வங்கி முடிவெடுத்துள்ளது.

உள்நாட்டு பொருளதாரத்தை மேம்படுத்தும் முகமாகவும் பணவீக்கத்தை 4-6 வீதமாக வைத்திருக்கவும் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி வணிக வங்கிகள் தம்மிடம் மீதமுள்ள பணத்தொகையை குறைந்த வட்டிவீதம் காரணமாக மத்திய வங்கியில் வைப்பிலிடமாட்டாது.

அத்துடன் மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கான கடன் வட்டிவீதத்தை குறைத்துள்ளமையால் பணத்தை வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி கடன்களாக வழங்க முயற்சிக்கும்.

இதன்காரணமாக நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அத்துடன் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை மத்திய வங்கி கொண்டுள்ளதாக பொருளதார நிபுணர்கள் கூறுகின்றனர்.