வவுனியாவில் விசேட பொருளாதார மத்திய நிலையம்

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

வடக்கில் இருந்து தென் பகுதிக்கு கொண்டு வரப்படும் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக வவுனியாவில் விசேட பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வடக்கில் இருந்து தினமும் சுமார் இரண்டாயிரம் லொறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகின்றன.

அவற்றில் கொண்டு வரப்படும் காய்கறிகளை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து, வெளியில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதன் காரணமாக நாடு முழுவதும் காய்கறி விலைகளை தம்புள்ளையை மையமாக கொண்டு நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வவுனியாவை மையமாக கொண்டு விசேட பொருளாதார மத்திய நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான கருத்து மோதல்கள் காரணமாக அது தடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.