இலங்கைக்கு வழங்கி வரும் நிதியுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீள்மதிப்பீடு

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

இலங்கைக்கு வழங்கி வரும் நிதியுதவிக்காக சர்வதேச நாணய நிதியம் 7வதும் இறுதியுமான மீள்மதிப்பீட்டை ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளவுள்ளது.

பெரும்பாலும் பொதுத்தேர்தலின் பின்னர் இந்த மதிப்பீடு நடத்தப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிதியுதவி திட்டத்தின் கீழேயே இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்பின்னர் இலங்கையின் நிலைமையை பொறுத்ததே அடுத்தக்கட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சர்வதேச நாணய நிதியக்குழுவினர் இலங்கை வந்தபோது நிதியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கவேண்டும் என்ற விருப்பத்தை இலங்கையின் அதிகாரிகள் வெளியிட்டிருந்தனர்.

எனினும் அவை மீள்மதிப்பீட்டின் பின்னரே ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.