த பைனான்ஸ் கம்பனியின் உரிமத்தை ரத்துச் செய்த இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை

Report Print Ajith Ajith in பொருளாதாரம்
305Shares

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, த பைனான்ஸ் கம்பனி பீஎல்சி, என்ற நிதிநிறுவனத்தின் உரிமத்தை இன்று முதல் இரத்துச்செய்ய முடிவெடுத்துள்ளது.

த பைனான்ஸ் கம்பனி இலங்கையில் செயற்படும் ஒரு நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனம் நிதிநிறுவன வர்த்தக சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனினும் 2008ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் பின்னடைவை சந்தித்து வந்தது. அத்துடன் நிதித் திரவத்தன்மையிலும் பிரச்சனையை எதிர்நோக்கி வந்தது.

வைப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2019 ஒக்டோபர் 23ம் திகதி திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கம்பனிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்து செய்வது பற்றிய அறிவித்தலை விடுத்திருந்தது.

இந்த அறிவித்தலை விடுத்து 30 நாட்களுக்குள் த பைனான்ஸ் கம்பனி பிஎல்சி எவ்வித ஆட்சேபனையும் வெளிப்படுத்தவில்லை.

அதன் அடிப்படையில் உரிமத்தினை இரத்து செய்வது பற்றிய அறிவித்தலை விடுவித்து 60 நாட்கள் முடிவடையும் நிலையில் த பைனான்ஸ் கம்பனி பிஎல்சியினது உரிமம் இரத்துச் செய்யப்படலாம்.

அதாவது 2019 டிசம்பர் 21ம் திகதிக்கு பின்னர் இரத்துச் செய்யப்படலாம்.

எனினும் த பைனான்ஸ் கம்பனி பிஎல்சியின் வேண்டுகோளுக்கு இணங்க நாணயச்சபை புதிய நம்பிக்கையான முதலீட்டாளரை சேர்த்து வியாபார மீளமைத்தல் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு மீண்டுமொரு வாய்ப்பளித்தது.

இருப்பினும் த பைனான்ஸ் கம்பனி பிஎல்சி இதுவரையில் எவ்வித திட்டத்தையும் சமர்ப்பிக்கவில்லை.

இதனையடுத்து த பைனான்ஸ் கம்பனி பிஎல்சியிற்கு வழங்கியிருந்த உரிமத்தை 2020 மே 22ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.