பங்குச் சந்தையில் அனைத்து பங்கு விலைக் குறியீட்டில் ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம்

Report Print Banu in பொருளாதாரம்
48Shares

கொழும்பு பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான அனைத்து பங்கு விலைக் குறியீடு கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக நேற்றையதினம் 7,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து பங்கு விலைக் குறியீடும் 7000 புள்ளிகளைக் கடந்த முதல் நிகழ்வு இதுவாகும் என தெரியவருகிறது.

கடைசியாக அனைத்து பங்கு விலைக் குறியீடும் இம்மைல் கல்லை கடந்த 2015 நவம்பர் 24ஆம் திகதி கடந்திருந்தது.

அனைத்து பங்கு விலைக் குறியீடு அதன் வரலாற்றில் முதல் முறையாக அக்டோபர் 01, 2010 அன்று விலைக் குறியீட்டுப் புள்ளி 7000 ஐத் தாண்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.