குறைவடைந்த பரீட்சை முறைகேடுகள்

Report Print Kumutha Kumutha in கல்வி

நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சை மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முறைகேடுகள் இந்த வருடம் குறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் 402 முறைப்பாடுகளும், 2015இல் 152 முறைப்பாடுகளும் கிடைத்ததாகவும், இந்த வருடம் இது தொடர்பில் 48 முறைப்பாடுகள் மட்டுமே கிடைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2014இல் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தொடர்பாக 38 முறைப்பாடுகளும், கடந்த வருடம் 22 முறைப்பாடுகளும் கிடைத்துள்ள போதிலும் இவ்வருடம் 15 முறைப்பாடுகளே கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வருடம் கிடைத்துள்ள முறைப்பாடுகள் பார்த்து எழுதுதல், பரீட்சை மண்டபங்களில் கதைத்தல் போன்ற சாதாரண விடயங்களே முறைப்பாடுகளாகக் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...

Comments