கிளி. போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை?

Report Print Mohan Mohan in கல்வி

வடக்கு மாகாணத்தில் இறுதி யுத்தத்தில் காரணமாக தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் பெருமளவு மாணவர்கள் கல்விகற்று வருகின்றதாக வடமாகாண கல்விபணிமனையின் தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 104 பாடசாலைகளில் 585 மாணவர்கள் பெற்றோரை இழந்த நிலையில் கல்விகற்று வருவதாகவும் விசேட கல்வி அலகுகளில் ஊடாக 444 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்று வருவதாகவும் மாவட்ட வலய கல்விப் பணிமனை புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புறச்சுழலில் ஏற்படுள்ள வாழ்வாதாரப் பிரச்சினை காரணமாக தாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து ஆர்வமாகக் கல்விகற்க முடியவில்லை என்றும் பெற்றோரை இழந்த மாணவர்கள் கருத்து வெளியீட்டுள்ளனர்.

Latest Offers

loading...

Comments