உதுல் பிரேமரட்ன மீது தாக்குதல் நடத்திய ஆறு பேர் கைது

Report Print Kamel Kamel in கல்வி

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் உதுல் பிரேமரட்ன மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆறு பேரும் பிரபு பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர்கள் எனவும் இதில் ஐந்து பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு வாகனமொன்றில் வந்தவர்கள், வாகனத்திலிருந்து இறங்கி ரி56 ரக ஆயுதங்களை காண்பித்து வாகனத்திற்கு வழி விடுமாறு அச்சுறுத்தியதாகவும், தமது முகத்தில் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் வெள்ளவத்தை பொலிஸார் ஆறு பேரை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Latest Offers

loading...

Comments