அரச வைத்தியர்களின் கோரிக்கை நியாயமற்றது: கல்வி அமைச்சர்

Report Print Kumutha Kumutha in கல்வி

அரச வைத்தியர்களின் கோரிக்கை நியாயமற்றது என்றும், அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப் போவதில்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹொரணயிலிருந்து ஹோமாகமைக்கு மாற்றலாகி வந்துள்ள வைத்தியரும்,மொனராகலையில் இருந்து நுவரெலியாவிற்கு மாற்றலாகி சென்றுள்ள வைத்தியர் ஒருவரும், பலாங்கொடயில் இருந்து ஹோமாகமைக்கு மாற்றலாகி சென்றுள்ள மற்றுமொரு வைத்தியரும் தமது பிள்ளைகளுக்காக கொழும்பு ரோயல் கல்லூரியில் அனுமதி கோரியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வைத்தியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வது தொடர்பில் 2005ஆம் சுற்றுநிருபத்தை சிதைக்கும் வகையில் இவர்களின் கோரிக்கைகள் அமைந்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரோயல் கல்லூரிக்கு 21 மாணவர்களும், விசாகா கல்லூரிக்கு 15 மாணவியரும், ஆனந்தா கல்லூரிக்கு 16 வைத்தியர்களின் பிள்ளைகளும் உள்ளீர்க்கப்பட வேண்டும் என வைத்தியர்கள் கோரியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Comments