கல்லூரி மாணவிகளுக்கிடையில் முறுகல் நிலை!

Report Print Thirumal Thirumal in கல்வி

பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இரு குழுக்களுக்கிடையில் இன்று முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கங்களூடாக இடம்பெற்ற இந்த முறுகல் நிலைமை கல்லூரி மாணவிகளின் உள்ளகப் பிரச்சினையாக கருதப்படுவதாக கல்லூரியின் பீடாதிபதி திருமதி.ரமணி அபேநாயக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கல்வியியற் கல்லூரியில் கற்றல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள இரண்டு இனங்களுக்கான மாணவிகள் நேற்று மாலை முதல் அவர்களின் இருப்பிடங்கள் மற்றும் மாணவிகளுக்கிடையிலான பகிடிவதைகள் தொடர்பிலேயே இந்த வாய்த்தர்க்கமும் முறுகல் நிலைமையும் ஏற்பட்டிருப்பதாக பீடாதிபதி தெரிவித்தார்.

இது தொடர்பில் மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டதாகவும், தற்போது இவர்களுக்கிடையில் சமாதானத்தை உருவாக்கி இருப்பதாகவும் பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.

Latest Offers

loading...

Comments