நாட்டுக்கு தனியார் வைத்திய கல்லூரிகள் தேவை! உயர்கல்வி அமைச்சர்

Report Print Kumutha Kumutha in கல்வி

நாட்டுக்கு தனியார் வைத்திய கல்லூரிகள் அவசியம் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயர்தரத்தில் சித்திபெறும் 20 வீதமானோரே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதாகவும், மிகுதி 80 வீதமானோருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு இல்லாமல் போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கு எமக்கு வாய்ப்பு இருந்தும், நாம் அதனை செய்யாது மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பல்கலைக்கழகங்கள் 10 தொடக்கம் 15 ஆரம்பிக்கப்படுமானால் பெருமளவான பணத்தினை எமது நாட்டில் சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் இவை யாவற்றையும் செய்வது நாட்டுக்காக என்றும், பல்கலைக்கழகங்களை சேர்ந்த 7 பீடாதீபதிகள் தன்னை வந்து சந்தித்து இதற்கு பூரண ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...

Comments