இந்தியா, லக்னோ நகரில் கடந்த வாரம் நடைபெற்ற உலக கணித அறிவுப் போட்டியில் கிழக்கு மாகாண பாடசாலையான திருகோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்கள் 6 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
8 மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் 02 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் 2 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இம்மாணவர்கள் இந்தியாவிலிருந்து நேற்றுக் காலை நாடு திரும்பிய நிலையில் அவர்களை திருகோணமலை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் வரவேற்றார்.