பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய ஆசிரியர் கைது

Report Print Thileepan Thileepan in கல்வி

வவுனியா - உலுக்குளம் மகாவித்தியாலயத்தில் பிறிதொரு நபருக்காக சாதாரண தரப்பரீட்சை எழுதிய அரச பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மின்சாரசபையில் பணியாற்றும் ஒருவருக்கு சாதாரண தரப்பரீட்சையில் தோற்றுவதற்காக அனுமதியட்டை கிடைத்திருந்தது.

எனினும் இவருக்கு பதிலாக சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமைபுரியும் ஆசிரியர் ஒருவர் பரீட்சை எழுதியுள்ளார்.

பரீட்சைக்கான அனுமதி கிடைத்த நபர், குறித்த பாடசாலை ஆசிரியருடன் ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டு பரீட்சையில் தோற்றச்செய்துள்ளார்.

இந் நிலையில் குறித்த நபர் மீது பரீட்சை மேற்பார்வையாளர்கள் சந்தேகம் கொண்டு பரிசோதித்தபோது பிறதொருவருக்காக பரீட்சை எழுத்தியமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வவுனிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் வவுனியா நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

Comments