யாழ்.ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியாக சாதனை

Report Print Nivetha in கல்வி
3610Shares

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் மாணவர்கள் பெற்ற புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் - மானிப்பாய் இந்து கல்லூரியின் மாணவன், பத்மநாதன் குருபரேஷன், கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும், தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தையும் பெற்று கொண்டுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றிய யாழ்ப்பாணம் - சுன்னாகம் - ஸ்கந்தவரோதய வித்தியாலயத்தின் மாணவன், கனகசுந்தரம் யதுர்சாயன் முதலிடம் பெற்றுள்ளார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதாயக் கல்லூரியில் முதன்முறையாக தொழில்நுட்பத் துறையில்இந்த மாணவன் தோற்றி இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை அதிபர் அவர்களுக்கும் எனக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் இந்தவேளையில் நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எங்கள் பாடசாலையில் தொழில்நுட்பப் பிரிவிற்கு ஆசிரியர்கள் இல்லாத போதும் வெளிவாரியான ஆசிரியர்களைக் கொண்டு எமது அதிபர் எமக்குக் கல்வி போதித்தார்.

இதற்குக் கனடா பழைய மாணவர் சங்கமும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் நான் மின்னணுத் தொழில் நுட்பவியலாளராக உருவாக வேண்டுமெனஆசைப்படுகிறேன் என யதுர்சாயன் இதன்போது தெரிவித்தார்.

மேலும் அதே பாடசாலையில் இந்த வருடம் கணிதத்துதுறையிலும் ஒரு மாணவன் 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் 25 ஆவது இடத்தைப்பெற்றுள்ளமையும், பொறியியல் துறையில் செல்வன்.ஜோய் மாவட்ட மட்டத்தில் ஏழாவது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளமையும் எமது கல்லூரிக்குப்பெருமையளிப்பதாக உள்ளது என பாடசாலை அதிபர் மு.செல்வஸ்தான் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர் தொழிநுட்பவியல் பாடப்பிரிவில் ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்தின் இல்யாஸ் பாத்திமா அரோச மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

இதேவேளை, உயிரியல் பிரிவில் கிண்ணியா மத்திய மகா வித்தியால மாணவன் எம். ரோஷேன் அக்தார் இரண்டாமிடம் பெற்றுள்ளதுடன், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியின் க்லேரின் திலுஜான் உயிரியல் பிரிவில் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் மானிப்பாய் இந்துகல்லூரியின் பத்மநாதன் குருபரேஷான் இரண்டாமிடத்தை பிடித்துள்ளார்.

Comments