வரலாற்றில் முதல்தடவை குடும்பிமலை பிரதேசத்திலிருந்து வர்த்தகப்பிரிவு மாணவி சாதனை

Report Print Reeron Reeron in கல்வி
2111Shares

வரலாற்றில் முதல் தடவையாக கல்குடா கல்வி வயத்திற்குப்பட்ட சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்ற மாணவியொருவர் சாதனை படைத்துள்ளார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட குடும்பிமலை பிரதேசத்தை சேர்ந்த கோவிந்தமூர்த்தி பிரசாளினி எனும் குறித்த மாணவி வர்த்தகப் பிரிவில் இம்முறை 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 44வது இடத்தினைப் பெற்றுள்ளார்.

வரலாற்றில் முதல்தடவையாக சந்திவெளி விநாயகர் வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக பிரிவில் 4 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். குறித்த பாடசாலையில் கலைப் பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவு மாத்திரம் உள்ளது.

மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மாணவியின் தந்தை சைக்கிளில் விறகு எடுத்து விற்று தங்களின் குடும்பத்தையும் தனது படிப்புக்குரிய செலவுகளையும் செய்து வந்தாக தெரிவித்தார்.

எனது குடும்பிமலை பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பிரதேசம், அங்கு உயர்தரம் படிப்பதற்குரிய பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் பல கஸ்டத்தின் மத்தியில் சந்திவெளி பாடசாலையில் படித்தோம்.

எனது தங்கைகளில் ஒருவர், இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கும், மற்றையவர் 5ம் தர புலம்மைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

எனது பிரதேசம் கல்வி நிலையில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற பிரதேசம், கல்வியைத் தொடர துடிக்கும் மாணவர்கள் அதிகமானவர்கள் தங்களின் வாழ்க்கையை இடை நடுவில் விட்டுவிட்டு இளவயது திருமணம் மற்று பெண்கள் பல்வேறுபட்ட துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர்.

இவ்வேளையில் நான் எதிர்காலத்தில் உயர்தரப் படிப்பினை தொடர்ந்து எனது குடும்பிமலை பிரதேசம் மற்றும் சந்திவெளி பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்குரிய சேவைகளைச் செய்வேன்.

இன்றைய நிலையில் ஊடகங்கள் உயர்தரத்தில் உயர் நிலையை அடைந்த மாணவர்களை மாத்திரம் இலக்கு வைத்து செய்திகளைப் பரப்புகின்றார்கள்.

என்னைப்போன்ற பல்வேறு நின்னல்களை சந்தித்த பிரதேசங்களில் இருந்து வெளியில்வரும் மாணவர்களை கண்டுகொள்ளாமை மனவேதனை அளிப்பதுடன் எதிர்காலத்தில் ஊடகங்கள் அவற்றை செவ்வனவே செய்வார்கள் என நினைக்கின்றேன்.

எனது குடும்ப நிலையினை நான் கூறியிருக்கின்றேன், எனது குடும்பிமலை பிரதேசத்தை மையப்படுத்திய எனது எதிர்கால கல்வி நகர்வுகள் இருப்பதினால் எனது உயர் கல்வியைத் தொடர எமது புலம்பெயர் வாழ் தமிழர்கள், அத்துடன் எமது நாட்டு நல்ல உள்ளம்படைத்தவர்கள் எனக்கு உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டுமென தயவாக கேட்டுக்கொள்கின்றேன் என மாணவி பிராசாளினி தெரிவித்தார்.

இன்றைய கல கட்டத்தில் எனது குடும்பத்தின் வாழ்வாதார நிலைமை ஒரு சைக்கிள் விறகுடன்தான் செல்கின்றது.

எனது மூன்று பெண் பிள்ளைகளையும் படிக்கவைக்க வேண்டும், அதிலும் வர்த்தக பிரிவில் மூத்த மகள் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறாள், உயர்கல்வியைத் தொடர எனது மகளின் கல்விக்கு உதவி செய்ய விரும்பியவர்கள் முன்வந்து உதவியைச் செய்யவேண்டுமென மாணவயின் தயார் தெரிவித்தார்.

Comments