அகில இலங்கை ரீதியாக ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்த மாணவர்கள்..

Report Print Shalini in கல்வி
626Shares

2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதில் மாவட்ட ரீதியாக, மாகாண ரீதியாக, பாடசாலை மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஒவ்வொரு துறையிலும் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

வர்த்தகப்பிரிவு (Commerce) - கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அகலங்க ராஜபக்ஸ முதலிடம் பெற்றுள்ளார்.

கலைப்பிரிவு (Arts) - கண்டி உயர்தர மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் இன்டிவரி கவரமன்ன முதலிடம் பெற்றுள்ளார்.

உயிரியல் (Biology) - மாத்தறை, ராஹூல பாடசாலையில் ல்வி கற்றும் நிசல் புன்சர முதலிடம் பெற்றுள்ளார்.

பௌதீகவியல் (Physics) - குருணாகல் மலியதேவ மகளிர் பாடசாலையில் கல்வி கற்றும் அமாயா தர்மசிறி முதலிடம் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பம் (Engineering technologies) - யாழ்ப்பாணம், சுன்னாகம் ஸ்கந்தவரோதயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கனகசுந்தரம் யதுர்சாயன் முதலிடம் பெற்றுள்ளார்.

உயிரி அமைப்புகள் தொழில்நுட்பங்கள் (Bio Systems technologies) - கேகாலை கோல்டன் ஜூபிலி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கே. மலினி சசிகலா தில்ரங்க முதலிடம் பெற்றுள்ளார்.

குறித்த பெறுபேறுகளில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் மாணவன் பொறியியல் தொழில்நுட்பத்தில் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Comments