தொழில்நுட்பத்துறையில் அகில இலங்கை ரீதியாக 3ஆம் இடத்தைப் பெற்ற ஓட்டமாவடி மாணவி

Report Print Reeron Reeron in கல்வி
426Shares

மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவின் உயிர் முறைமைகள் தொழில்நுட்பத்துறையிலே இல்யாஸ் பாத்திமா அரூசா என்ற மாணவி 3 ஏ சித்திகளைப் பெற்று உயர் சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் 1ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில்,

“எனது குடும்பம் ஒரு சாதாரண குடும்பம் என்பதினால் மிகவும் கஷ்டத்தின் மத்தியிலே கல்வியைத் தொடர்ந்தேன். உயர் தரத்தில் முதன் முதலாக கலைத் துறையைத் தெரிவு செய்து படித்த வேளை கலைத் துறையில் இருந்து மாறி குறித்த உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவைத் தெரிவு செய்தேன்.

ஒரு குறுகிய காலப் பகுதியில் இப்பாடத்துறையை விரும்பி விடாது கற்றமையினால் சிறந்த பெறுபேற்றைப் பெற்றேன்” எனத் தெரிவித்தார்..

அவரது தந்தை கூறுகையில்,

“எனது மகள் அகில இலங்கை ரீதியாக நாட்டிற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். நாங்கள் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கொண்டு எனது மகளின் படிப்புச் செலவுகளையும் ஏனைய குடும்பச் செலவுகளையும் கவனித்து வந்தேன்” எனத் தெரிவித்தார்.

Comments