மன்னார் மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவன்

Report Print Ashik in கல்வி
336Shares

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் ரி.குருதயராஜ் அதிதிறமை சித்திகளை பெற்றுள்ளார்.

ரி.குருதயராஜ் 3 ஏ சித்தியை பெற்று வர்த்தக துறையில் மன்னார் மாவட்டத்தில் முதல் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் மாவட்ட மட்டத்தில் முதலாவது நிலையை பெற்று தான் கல்வி கற்ற மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கும், மன்னார் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தனது எதிர்கால இலட்சியமாக பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியானாலும், சுயமான தொழில் ஒன்றையே செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Comments