80 வருட வரலாற்றைக் கொண்ட நாவிதன்வெளி அன்னமலை ம.வி இல் 12பேர் தெரிவு!

Report Print V.T.Sahadevarajah in கல்வி
60Shares

சம்மாந்துறை வலயத்திற்கு உட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி 12 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

80 வருட வரலாற்றைக் கொண்ட இக்கல்லூரியில் முதனிலை மாணவனாகத் தெரிவான எஸ்.விதுர்சன் ஏ2,பி பெற்றதன் மூலம் கலைத்துறையில் மாவட்டத்தில் 3ஆம் இடம்பெற்று மற்றுமொரு சாதனை நிகழ்த்தியுள்ளார் என வித்தியாலய அதிபர் என்.பிரபாகர் தெரிவித்தார்.

கலைத்துறையில் ரி.சிந்துஜன், எம்.பகீரதி ஆகிய இரு மாணவர்களும் 2ஏ,1பி சித்தியை பெற்று முறையே மாவட்டத்தில் 50 மற்றும் 60வது நிலையிலுள்ளார்.

ஜே.ருக்சன் மற்றும் எஸ்.அஜித்குமார் ஆகியேர் ஏ2,பி சித்தியை பெற்றுத் தெரிவாகியுள்ளனர்.

ஏ,பி,சி என்ற முடிவை என்.சர்மினி ஜே.தர்சினி எஸ்.அனுசியை பி.சுரேணிகா எஸ்.தர்சா ஆகிய 05 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

2பி,1சி என்ற முடிவை ஆர்.ஜெயந்தன் பெற்றுள்ளர் என உயர்தரப்பிரிவுக்கான இணைப்பாளரும் பிரதி அதிபருமான திருமதி என்.ரவிச்சந்திரன் குறிப்பிட்டார்.

கணிதத்துறையில் 3 மாணவர் தோற்றியிருந்தனர். முதல் மாணவன் பி.கதிர்சன் 2சி,1எஸ் சித்தியும், வி.தருட்சன் எஸ்.நிலக்சனதாஸ் ஆகிய இரு மாணவர்களும் 3எஸ் சித்திகளையும் பெற்றுள்ளனர்.

மாணவர்கள் அரசியல் விஞ்ஞானம், இந்து நாகரீகம் ஆகிய இரு பாடங்களில் 100 வீதம் சித்தியடைந்திருப்பதாக பாடத்துறைப் பொறுப்பாளர் என்.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பின்தங்கிய பிரதேசத்திலுள்ள இப்பாடசாலை சாதனை படைத்திருப்பதை இட்டு வலயக்கல்விப் பணிப்பார் எம்.எஸ்.சஹதுல்நஜீம், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

Comments