அண்மையில் வெளியான கல்வி பொதுத்தர உயர்தர பரீட்சையில், கண் பார்வையில் கோளாறு உள்ள மாணி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
காலி மாவட்டத்தில் கலை பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய தனுஷி மல்லிகாராச்சி என்ற மாணவி முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
குறித்த மாணவி தெளிவான கண் பார்வையற்ற நிலைமையில் இந்த பெறுபேறுகளை பெற்றமையே விசேட அம்சமாகும்.
Braille system எனப்படும் பார்வையற்றவர்களுக்கான முறையை பயன்படுத்தியும் மாணவி பரீட்சை எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனைய மாணவர்களை போன்று சாதாரண முறையில் பரீட்சை எழுதிய தனுஷி, தனது கண்களுக்கு மிகவும் அருகில் புத்தகத்தை அல்லது பரீட்சை தாள்களை கொண்டு சென்றால் மாத்திரே அவரால் பார்க்க முடியும்.
அவர் கற்கையின் போது புத்தகத்தை கண்ணுக்கு மிகவும் அருகில் சென்றே கற்றுள்ளார்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் எவ்வளவு தடைகள் ஏற்பட்டால் அதனை தாண்டி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு தனுஷி ஒரு சிறந்த உதாரணமாகியுள்ளார்.