வவுனியாவில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்ற சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள்

Report Print Thileepan Thileepan in கல்வி
124Shares

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகள் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர் என பாடசாலையின் அதிபர் பி.கமலேஸ்வரி தெரிவித்தார்.

இதனடிப்படையில் கா.துசாந்தினி 3 ஏ, அ.அபிராமி 3 ஏ, வி.டிலக்சனா 3 ஏ, யோ.ரட்சனா 2 ஏ - பி மற்றும் த.டிலக்சனா 2 ஏ - பி ஆகிய மாணவிகள் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளனர்.

உயிரியல் தொழில்நுட்ப துறைக்கு மாவட்ட மட்டத்தில் ச.திருஸ்ரிகா 4 ஆம் இடத்தினையும் சு.பிரியதர்சினி 6 ஆம் இடத்தினையும் சு.விபீசா 10 ஆம் இடத்தினையும் பெற்றுச் சித்தியடைந்துள்ளனர்.

கலைத்துறையில் செ.பிருந்தா 3 ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் வர்த்தக துறையில் கீர்த்திகா பொன்ராசா 3 ஏ, ஜர்சனா ஜெயமோகன் 3 ஏ, துசாந்தி கனகலிங்கம் 3 ஏ மற்றும் திவ்வியா மோகனராஜா 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ள நிலையில் வர்த்தக பிரிவில் தோற்றிய அனைத்து மாணவிகளும் 100 வீத சித்தியையும் பெற்றுள்ளனர்.

இதே வேளை இப்பாடசாலையில் இருந்து விஞ்ஞானதுறையில் 55 மாணவிகளும் கலைத்துறைக்கு 52 மாணவிகளும் வர்த்தகதுறையில் 46 மாணவிகளும் உயிரியல் தொழில் நுட்பதுறையில் 48 மாணவிகளும் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments