தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம் நாளை

Report Print Ajith Ajith in கல்வி

புதுவருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கிரிபத்கொட விஹாரமகாதேவி மகளிர் கல்லூரியில் நாளை நடைபெறவுள்ளது.

இதேவேளை, தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களும் நாளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் திறமைகளை இனங்காணும் வேலைத்திட்டம் பாடசாலைகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் ஆரம்ப கல்விக்குப் பொறுப்பான பணிப்பாளர் அசோக்கா பண்டித்தசேகர தெரிவித்துள்ளார்.

Comments