கல்விக்கூடமாக மாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம்!

Report Print Ajith Ajith in கல்வி
98Shares

கொழும்பிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்குரிய இடத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஒதுக்கி தருவதாக கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிகதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள சில பாடசாலைகளில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலேயே இயங்கி வருகின்றதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடசாலைகளில் கல்வி கற்கின்ற மாணவர்கள் பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளைப் பெறுவதற்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments