சிறப்பாக நடைபெற்ற கால்கோள் விழா

Report Print Thileepan Thileepan in கல்வி
60Shares

வவுனியா விபுலானந்த கல்லூரியில்..

வவுனியா விபுலானந்த கல்லூரியில் அதன் அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் நேற்று(11) கால்கோள் விழா சிறப்பாக நடைபெற்றது.

தரம் ஒன்றுக்கு புதிதாக பாடசாலைக்கு இணைந்த மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்றதுடன் குழுப்பாடல், நடனம் என பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில்..

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை பிறையினர் செலர் தலைமையில் சிசிலியா மேரிஅரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மதப்பெரியார்கள், கல்லூரி பிரதி முதல்வர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

Comments