பயிற்சி பெறாத ஆசிரியர்களா? இதோ பயிற்சிபெற வாய்ப்பு

Report Print V.T.Sahadevarajah in கல்வி
117Shares

நாட்டிலுள்ள பாடசாலைகளில் பயிற்சி பெறாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க கல்வி அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

பட்டதாரி அல்லாத பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலைகளில் ஆசிரியர் கல்வி பாட நெறியினைத் தொடர்வதற்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது.

விண்ணப்பங்களை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் கல்விப்பணிப்பாளர் ஆசிரியர் கல்வி நிர்வாகக்கிளை கல்வி அமைச்சு இசுருபாய பத்தரமுல்ல எனும் விலாசத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கல்வியமைச்சின் 28.2016ஆம் இலக்க சுற்றறிக்கைக்கைக்கு அமைவாக விண்ணப்பங்கள் அமைதல் வேண்டும்.

சுற்றறிக்கையையும் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆலோசனைப் படிவத்தை பெற கல்வி அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தை பார்வையிடலாம். அல்லது எந்தவொரு வலயக்கல்வி காரியாலயத்திலும் பெறலாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Comments