மாணவர்களுக்கு புலமைப்பரிசிலை வழங்கும் ஊழியர் பொறுப்பு நிதியச் சபை

Report Print Ajith Ajith in கல்வி

5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற ஊழியர் பொறுப்பு நிதியச் சபை உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இம்முறையும் புலமைப்பரிசிலை வழங்க ஊழியர் பொறுப்பு நிதியச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 3 மாதங்களுக்குள் இந்தப் புலமைப்பரிசிலை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக சபையின் பிரதிப் பொது முகாமையாளர் டபிள்யு.எஸ்.வசந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு பிள்ளைக்கு 15 ஆயிரம் ரூபா என்ற வகையில் இவ்வாறான புலமைப்பரிசிலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதுவரை 5 ஆயிரத்து 800 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதிப்பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பொறுப்பு நிதியத்திற்கு உறுப்பினர்கள் தொடர்ந்து பத்து வருடங்கள் பங்களிப்பு செய்திருந்தால் இந்தப் புலமைப்பரிசிலை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்களாவர்.

மேலும் அண்மையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கும் ஊழியர் பொறுப்பு நிதியச் சபை 12 ஆயிரம் ரூபா புலமைப்பரிசிலாக வழங்க தீர்மானித்துள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளதாகவும் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments