கிழக்குப் பல்கலைக்கழகம் மாணவர்களினால் முற்றுகை : மாணவர்களை வெளியேற அவசர உத்தரவு

Report Print Reeron Reeron in கல்வி
921Shares

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் முதலாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கும் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

முதலாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் இன்று பிற்பகல் 5 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு வருட சிங்கள மாணவர்கள் அதிகமானவர்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அதுமட்டுமின்றி பல்கலைகழக நிர்வாகத்தினரால், மாணவர்கள் வெளியேறும் நேரம் அறிவிக்கப்பட்டும் எதனையும் பொருட்படுத்தாமல் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தின் பல பகுதிகளில் தங்களின் உடு துணிகளை தொங்க விட்ட நிலையில் இன்றைய இரவு நேரத்திற்கான உணவுகளையும் பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தின் பல பகுதிகளில் மாணவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறன.

இதேவேளை, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுதியுள்ளோம்.

ஆனால் நிர்வாகம் எவ்வித தீர்வும் பெற்றுத்தரவில்லை என மாணவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Comments