அவசர அவசரமாக ஒன்றுகூடிய கிழக்கு பல்கலை நிருவாகம்! நடந்தது என்ன?

Report Print Reeron Reeron in கல்வி
205Shares

கிழக்கு பல்கலையின் முதலாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் நேறறு பிற்பகல் 5 மணிக்கு முன்னர் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தரினால் அறிவிக்கப்பட்டது

இதனையடுத்து மாணவர்கள் வெளியேறாத நிலையில் குறித்த விடயம் தொடர்பாக பல்கலைக்கழக நிருவாகம் அவசர அவசரமாக ஒன்றுகூடி தீர்மானங்கள் எடுக்கப்பட்ட நிலையில் நிருவாகத்தின் தீர்மானங்களை மாணவர்கள் நிராகரித்துள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களாக

பல்கலைக்கழகத்தின் நிருவாக கட்டிடத்தை அவமதிக்கும் வேலையாக நிருவாக கட்டிடம் தொடக்கம் உபவேந்தர் அறை வரைக்கும் மாணவர்கள் அணியும் உடைகளை தொங்க விடப்பட்டு இருப்பது கீழ்த்தரமான வேலை அனுமதிக்க முடியாது என தெளிவுபடுத்தப்பட்டு நிருவாகம் எடுத்த தீர்மானங்களை மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டது.

2ம், 3ம் வருட மாணவர்களுக்குரிய கல்வி நடவடிக்கையை உடனடியாக இடை நிறுத்துமாறும்.இன்று(நேற்று) இரவு முழுவதும் மாணவர்கள் பல்கலைக்கழக நிருவாக கட்டிடத்தில் இருந்தால் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் குறித்த மாணவர்களின் தலைவர்கள் அனைத்து பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்.

மாணவர்கள் நாளைய தினம் (19) பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறாவிட்டால் பல்கலைக்கழக நிருவாகம் உடனடியாக பல தீர்மானங்களை எடுத்து மாணவர்களை வெளியேற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டு மாணவர்கள் முன்னிலையில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதேவேளை பல்கலைக்கழக மானியங்களின் செயலாளர் இன்றைய தினம் இடம்பெற்ற சம்பவத்திற்குரிய மாணவர்களுக்கு விடுதி வசதி வழங்காமைக்குரிய காரணங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதாவது சர்வோதய நிறுவனம் முன்பு மாணவர்களுக்குரிய இட வசதி கொடுத்த நிலையில் அங்குள்ள பொருட்களை உடைத்து நாசப்படுத்தியமை.தனியார் வீடுகளை கடந்த காலங்களில் ஏற்படுத்திக் கொடுத்தும் தமிழ் மக்களின் கலாசாரம் சீரழியும் வகையில் சிங்கள மாணவர்கள் மற்றும் மாணவிகள் இரவு வேளையில் நடமாடித் திரிகின்றமை, பல்வேறு நடத்தைகளில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகளினால் மனித உரிமையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சமூகம் வீடுகளை தரமுடியாது என்பதால் வீடுகளை பெறமுடியாத நிலை.வீட்டுக்கு வாடகை எடுத்துக் கொடுப்பதாக இருந்தால் லட்சக் கணக்கான பணம் தேவைப்படுகின்ற நிலையில் அவ்வாறான பண வசதியில்லாத நிலையில் வீடுகளை வாடகைக்கு அமர்த்த முடியாத நிலையுள்ளதினால் இவர்களுக்கரிய விடுதி வசதிகளை செய்து கொடுக்க முடியாமல் இருப்பதாக தெளிவுபடுத்தப்பட்டதாக தெரியவருகின்றது.

Comments